வடசென்னை’ படத்தின் முதல் பாகத்திற்கான படப்பிடிப்பு
மூன்று பாகங்களாக உருவாகவிருப்பதாக அறிவிக்கப்பட்ட ‘வடசென்னை’ படத்தின் முதல் பாகத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் ஜெயில் செட் ஒன்றில் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. தனுஷ் நாயகனாக நடிக்கும் இப்படத்தை ‘தாதா’க்களின் வாழ்க்கைப் பின்னணியை மையமாக வைத்து உருவாக்கி வருகிறார் வெற்றிமாறன்.
லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சமந்தா, ஆன்ட்ரியா ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்க
ளாம். இவர்களோடு விஜய்சேதுபதி, சமுத்திரக்கனி, கிஷோர், டேனியல் பாலாஜி ஆகியோருக்கும் முக்கிய வேடங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இப்படத்தில் இயக்குனர் சுப்ரமணியம் சிவா நடிக்கவிருப்பதாக லேட்டஸ்ட் தகவல் ஒன்று தெரிவிக்கிறது. தனுஷின் திருடா திருடி, சீடன் படங்களை இயக்கிய சிவாவிற்கு ‘வடசென்னை’ படத்தில் தாதா கேரக்டர் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் விரைவில் படமாகும் என்கிறார்கள்.
No comments: